×

வெளிநாடுகளில் சைபர் அடிமைகளாக தமிழர்கள் - 10 இடைத்தரகர்கள் கைது.. சிபிசிஐடி அதிரடி.. 

 


சைபர் அடிமைகளாக கம்போடியா லாவோஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு  தமிழர்களை அனுப்பிய விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸார்  10 தரகர்களை கைது செய்துள்ளனர்.   

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் உள்ள அடிப்படைக் கணினி / தட்டச்சு மற்றும் ஆங்கில மொழி அறிவுள்ள மேயவாய்ப்பு தேடும் இளைஞர்கள் சட்டமிரோதமான ஆட்சேர்ப்பு நிறுவனங்கள்/இடைத்தரகர்களின் அதிக சம்பளம் மற்றும் தங்குமிடம் போன்ற வாக்குறுதிகளை நம்பி வெளிநாடு சென்று அங்கு இணைய மோசடிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். டெலிகிராம், வாட்ஸ்-ஆப், ஃபோப்புக் மற்றும் கூகுள் போன்ற சமூக ஊடகங்களில் இது சம்மந்தபட்ட சுவர்ச்சியான விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. 

அவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நபர்கள் சுற்றுலா விகாவில் தாய்லாந்திற்கு சென்று அங்கிருந்து லாவோஸ் மற்றும் கம்போடியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கம்பி வேலியிடப்பட்ட மோசடி நடக்கும் வளாகங்களில் (Scam Compounds) அடைந்து வைக்கப்படுகின்றனர். அங்கு ஃபெடெக்ஸ் (Fedex) மோடி, முதலீட்டு மோசடி, சுட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள், திருமண மோசடி, காதல் மோசடி போன்ற இணைய மோசடிகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டுகள் வலுக்கட்டாயமாக பறிக்கப்படுகின்றன. மேலும் அவர்கள் வேலை செய்ய மறுத்தால், மின்சாரம் பாய்ச்சுதல் மற்றும் பிற உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சில சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்க பெரும் நொகை கோரப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிலர் இத்தகைய மோசடி நடைபெறும் வளாகங்களிலிருந்து தப்பி அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் பயண ஆவணங்களைப் பெற்று நாடு திரும்பி உள்ளனர். 

இவ்வாறு. படித்த இளைஞர்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைத்துச் சென்று அடைக்கப்பட்டு சையர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இணைய அடிமைத்தனத்தைக் கட்டுப்படுத்தம் முயற்சியில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக திகழ்ந்துள்ளது. 2022-ம் ஆண்டிலேயே சட்டவிரோத ஆட்சேர்ப்பு இடைத்தரகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்தகைய மோசடிகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் I4C (இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையம்) மற்றும் பிற மத்திய நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் I4C (இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையம்) தெற்காசிய நாடுகளுக்குச் சென்று சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு திரும்பாத பயணிகள் தொடர்பான விவரங்களை வழங்கி அது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுடன் ஒரு கலந்தாய்வு கூட்டத்தையும் நடத்தியது. 

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் அவர்களின் அறிவுறுத்திலின் பேரில், தமிழகம் திரும்பாத 1285 பயணிகளின் விவரங்களை பெறப்பட்டு சரிபார்ப்பு மற்றும் மேல்நடவடிக்கைக்காக தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை-க்கு அனுப்பப்பட்டது. மேலும், புலம்பெயர்ந்தோரின் காப்பாளர் (POE), குடிவரவு பணியகம் (BOI), மற்றும் இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) ஆகியோரிடமிருந்து தமிழகம் திரும்பிய 196 பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் கு.பி.குயுது-க்கு வழங்கப்பட்டது. 

இது தொடர்பாக, தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புயனாய்வுதி துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் சென்னை, சேலம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, அரியலூர், மதுரை நகரம் மற்றும் விருதுநகர் கு.பி.குயுது பிரிவுகளில் மனிதக் கடத்தல் மற்றும் இந்தியக் குடியேற்றச் சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 சட்டவிரோத ஆட்சேர்ப்பு இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். விசாரணையின் போது பலத்த பாதுகாப்புடன் கூடிய மோசடி வளாகங்களில் (Scam Compounds) அடைத்து வைக்கப்பட்டு, அவர்களது பாஸ்போர்ட் மற்றும் கைபேசிகள் பறிக்கப்பட்டு, ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அவர்கள் வேலை செய்ய மறுத்த போது மின்சாரம் பாய்ச்சி கொடுமைப் படுந்துதல், பட்டினி உள்ளிட்ட உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். உறுதி செய்யப்பட்ட சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதும், அவர்களின் சம்பளத்திலிருந்து அபராதத் தொகைகள் பலமுறை பிடித்தம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

I4C வழங்கிய 1285 பயணிகளின் விவரங்கள் தொடர்பாக குமி.குபுது விசாரணை மேற்கொண்ட போது, 1155 நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டதில் அவர்களில் 246 நபர்கள் சுற்றுலா, மருத்துவ சிகிச்சை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகச் சென்று நாடு திரும்பியவர்கள் என தெரிவித்தனர். பட்டியலில் உள்ள 114 பயணிகள் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இணைய அடிமைத்தனம் தொடர்பான வழக்குகளின் விசரணையின் போது மோசடி செய்பவர்கள் சட்டவிரோத மனிதக் கடத்தல் மட்டுமல்லாமல் கம்போடியா மற்றும் லாவோசில் மோசடி செய்வதற்காக சாமானிய மக்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகள் மற்றும் சாமானிய மக்களின் பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குகளையும் பயன்படுந்தியது கண்டறியப்பட்டுள்ளது. மோஈடி செய்யவர்கள் இந்திய வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி மோசடிப் பணத்தைப் பெற்று, பின்னர் அவற்றை கிரிப்டோ கரன்ஸியாக மாற்றி, தங்கள் நாடுகளுக்கு அனுப்பிவிடுகின்றனர். I4C -ன் அறிக்கையின் படி, 14 மாதங்களிலேயே (ஜனவரி 2022 முதல் பிப்ரவரி 2024 வரை) இந்தியாவிலிருந்து கமார் 10,188 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. 

ஐ.டி நிறுவனங்களின் மனிதவள மேலாளர்கள், கணிணிப் பயிற்சி நிறுவனங்கள், அப்பாவி கிராம மக்கள் போன்றவர்களிடையே இணைய அடிமைத்தனம் பற்றியும், வெளிநாடுகளில் உண்மையாக வேலை தேடுபவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பது குறித்தும், தமிழ்நாடு காவல்துறை தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இது நெடர்பாக, தமிழ்நாடு காவல்துறை ஏற்கனவே அதன் சமூக ஊடகத் தளங்களில் விழிப்புணர்வுப் பதிவுகள், குறும்படங்கள் மற்றும் ரில்ஸ் (Reels) வெளியிட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சட்டவிரோத ஆட்சேர்ப்பு நிறுவனங்கள்/இடைத்தரகர்களை அணுகி வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பெறுவதைத் தவிர்க்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுக் கொள்கிறது. 

மேலும் வெளிநாட்டிற்குச் செல்வதற்கு முன், வேலையின் தன்மை, வேலை செய்யுமிடம் ஆகியவற்றை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. தேசத்தின் பொருளாதார நலன் கருதி இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இது போன்ற மோசடிகள் காரணமாக பொதுமக்கள் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை இழக்கும் நிலை ஏற்படுவது மட்டுமல்லாமல், உடல் ரீதியான மற்றும் மன ரீதியான இன்னல்களுக்கு ஆளாகவும் நேரிடுகிறது.” என்று தெரிவித்துள்ளது.