தவெகவில் 120 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்- வெள்ளி நாணயம் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
Jan 24, 2025, 16:42 IST

தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு, கட்சியின் தலைவர் விஜய், வெள்ளி நாணயம் வழங்கி உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார். தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.