×

தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 12,000 பேர் கைது

 

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவற்றக்கோரி   2 - ஆம் கட்டமாக இன்று மாநிலம் முழுதும் மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே மீண்டும் அமல்படுத்திட வேண்டும, சரண்விடுப்பு ஒப்படைப்பு  உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைதல், பணி உயர்வு, மற்றும்ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 11,970 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்கள் கடந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, காலம் காலமாக பெற்று வந்த சரண் விடுப்பை (Surrender Leave) காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருவது குறிப்பிடதக்கது.