×

சென்னையில் வெயிலின் தாக்கத்தால் 12ம் மாணவன் உயிரிழப்பு!

 

சென்னையில் வெயிலின் தாக்கத்தால் 12ம் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில்  கத்திரி வெயிலுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக அளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.  வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்தனர். கோடை மழையின் காரணமாக  கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில்  108  டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது.


இந்நிலையில் சென்னை திருநின்றவூரில் கடும் வெயிலின் தாக்கத்தால் 12 ஆம் வகுப்பு மாணவன் சக்தி சுருண்டு விழுந்து உயிரிழந்தான்.  இதயநோய் பாதிப்பால் உயிரிழந்த ஹரிசுதன் என்ற சக மாணவரின் உடலை பார்க்க சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனுக்கு பிறவியிலேயே வியர்வை சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யாமல் இருந்ததாலும், மற்ற இணை பாதிப்புகள் இருந்ததாலும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.