ராமநாதபுரத்தில் நாளை மறுநாள் முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு!
Sep 7, 2023, 13:10 IST
ராமநாதபுரத்தில் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி, அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறை சென்றவரும், சமூக சேவை மேற்கொள்வதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் தனது இராணுவப் பணியை துறந்தவரும், பன்மொழிப் புலவருமான இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் வருகிற 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி, அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.