டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!!
டி.டி.எஃப் வாசனை அக்.3ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் அவரது கை, கால் முறிந்துள்ளது. அது தவிர பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337), டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. பிணையில் வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது
இந்நிலையில் டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்.3ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.