×

இந்தியன் 2 திரைப்படத்தின் 15 நிமிட காட்சிகள் நீக்கம்!

 

இயக்குநர் ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி  இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. லைக்கா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசை அமைத்திருந்தார். 

தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு உலகம் முழுவதும் வெளியான இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் நீளம் கருதி இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டு பாகங்கள் ஆக பிரிக்கப்பட்டது. இருப்பினும் வெளியான இந்தியன் 2 திரைப்படம் விறுவிறுப்பு இல்லாத திரைக்கதையால் ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும்  3 மணிநேரம் ஓடும் படத்தின் நீளமும் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. 

இதனால் தற்போது படத்தின் 15 நிமிட காட்சியை படக்குழு நீக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் 15 நிமிடத்தை நீக்கி இந்தியாவிற்கான சென்சார் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் நீக்கப்பட்ட காட்சிகளோடு திரைப்படம் ஒளிபரப்பப்படும்என தகவல் வெளியாகி உள்ளது.