×


பெண் தோழியுடன் பீச்சுக்கு அவுட்டிங் சென்ற 5 நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்

 

மாமல்லபுரம் கடல் பகுதியில் நண்பர்களுடன் சுற்றுலா வந்த ஐந்து இளைஞர்களில் ராட்சத அலையில் சிக்கி கிரிஷ் (20), ரியாஸ் (19) ஆகிய 2 பேர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்(20) இவர் முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சி.ஏ. படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்(18), இவர் பூந்தமல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் கலைஞராக உள்ளார். இவர்கள் 2 பேரும் தனது  நண்பர்களான 1 பெண் உள்ளிட்ட 5 பேருடன் மெரினா பீச்சுக்கு செல்வதாக கூறிவிட்டு, மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் நண்பர்கள் 5 பேரும் மாமல்லபுரம் மீனவர் பகுதி கடலில் குளித்துள்ளனர். 

கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் ராட்சத அலையில் சிக்கி கிரீஷ், ரியாஸ் இருவருக்கு நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டனர். உடன் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரும் தங்கள் கண் எதிரில் கிரீஷ், ரியாஸ் இருவரும் கடலல் அடித்து செல்லப்பட்டதை கண்டு துடித்து அழுதனர். பிறகு தகவல் அறிந்து மாமல்லபுரம் அங்கு வந்த மாமல்லபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் படகில் சென்று மாயமான கிரீஷ், ரியாஸ் இருவரின் உடலை தேடி வருகின்றனர்.