×

குட்டையில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் 2 குழந்தைகள் நீரில் மூழ்கி பலி

 

அரக்கோணம் அருகே குட்டையில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த நெமிலி புன்னை கிராமத்தில் கூலி வேலை செய்து வருபவர் பரமசிவம். இவரது மகன் சுப்ரியா (வயது 11) மற்றும் மகள் திவ்யா (வயது 10) ஆகிய இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். மூன்று தினங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டதால் அருகே உள்ள  குட்டையில் இரண்டு குழந்தைகளும் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது நீரில் தவறி விழுந்து இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். 

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நேமிலி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவம் கிராமப்புற பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.