×

2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்.. முதல்வரின் இணைச் செயலராக லட்சுமிபதி நியமனம்.. 

 

தமிழக முதலமைச்சரின் இணை செயலராக ஐ.ஏ.எஸ் அதிகாரி லட்சுமிபதியும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ்-ம் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா, நேற்று  ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து  தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக யார் நியமிக்கப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.  இந்த நிலையில் இன்று காலை  முதலமைச்சரின் இணைச் செயலர்களில் முதன்மைச் செயலாளராக இருந்த நா.முருகானந்தம் ஐ.ஏ.எஸ். , புதிய தலைமை செயலாளராக  நியமிக்கப்பட்டார். 

இன்று காலை பணி நியமனம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே,   புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட முருகானந்தம் ,  ஐ,ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.  அதன்படி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  முன்னதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த அவர்,  இந்தப் புதிய பதவியில் பணியர்மர்த்தப்படுவதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.