விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!!
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - மதிமுக, விசிக இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியான மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை போட்டியிட்ட விழுப்புரம், சிதம்பரம் தனித் தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.சி.க. தலைவர் திருமாவளவன் கையெழுத்தானது.