×

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் அமைப்பு!

 

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 24 மணி நேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (ஐயப்பன்) திருக்கோயிலில் மண்டல பூஜை 15.11.2024 முதல் 26.12.2024 வரையும் மற்றும் மகரவிளக்கு ஜோதி திருவிழா 30.12.2024 முதல் 19.01.2025 வரை நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மையம் 24.01.2025 வரை செயல்படும்.

தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-28339999 5 1800 425 1757 ல் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.