தமிழகம் முழுவதும் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Updated: Aug 8, 2024, 17:29 IST
24 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக 14 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, தூத்துக்குடி, கோவை, பெரம்பலூர், கரூர், சேலம் நாகை, திருப்பத்தூர், விருதுநகர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தருமபுரி, தென்காசி,வேலூர் ஆகிய மாவட்ட எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக நிஷா நியமனம்
- தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம்
- கோவை மாவட்ட எஸ்.பி.யாக கார்த்திகேயன்
- பெரம்பலூர் எஸ்.பி.யாக ஆதர்ஷ் பச்சேரா நியமனம்
- நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அருண் கபிலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.ஆர். சீனிவாசன் நியமனம்
- கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பெரோஸ்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ். மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன் நியமனம்
- திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேடா குப்தா நியமனம்
- மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கவுதம் கோயல் நியமனம்
- திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக செல்வநாகரத்தினம் நியமனம்
- மயிலாப்பூர் காவல் துணை கண்காணிப்பாளராக ஹரிகிரண் நியமனம்
- சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக ராமமூர்த்தி உள்ள நிலையில் மற்றொரு துணை ஆணையராக சக்தி கணேசன் நியமனம்