×

24 காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு..

 


தமிழகத்தில் 24 காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து,  புதிய பணியிடங்கள் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  

கூடுதல் கண்காணிப்பாளர் பி.மணிகண்டன் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை சென்ட்ரல் எல்லைக்குட்பட்ட விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன்  -  சென்னை மத்திய குற்றப்பிரிவு - கிளை 1 கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.  

கள்ளக்குறிச்சி கூடுதல் கண்காணிப்பாளர்  எஸ். குத்தாலிங்கம் - பதவி உயர்வு பெற்று சென்னை தியாகராயர் நகர் துணை ஆணையராக  நியமிக்கப்பட்டுள்ளார்

மதுரை விஜிலென்ஸ் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.விஜயகுமார் - திருநெல்வேலி கிழக்கு மாவட்ட துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னை எஸ்.பி.சி.ஐ.டி கூடுதல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் - சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.  

கிருஷ்ணகிரி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் சி.சங்கு  - போச்சம்பள்ளி போலீஸ் பெட்டாலியன் காவல் கண்காணிப்பாளராக நியமனம்

திருநெல்வேலி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ஏ.சி.கார்த்திகேயன்  -  தாம்பரம் பள்ளிக்கரணை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தேனி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் - பழனி காவல் பயிற்சி மைய கண்காணிப்பாளராக நியமனம்

விஜிலன்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன் - மதுரை  சிவில்
சப்ளைஸ் சிஐடி காவல் கண்காணிப்பாளராக நியமனம்

இதேபோல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் எஸ். அசோக்குமார் கோவை போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்


சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக முத்துக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை கிழக்கு மாநகர துணை ஆணையராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் கண்காணிப்பாளர்கள் அருண் , என். தேவநாதன்,  ஈஸ்வரன், கோமதி, மீனாட்சி, வேல்முருகன்,  முத்தமிழ், ஜரீனா பேகம் உள்ளிட்டோரும் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது