×

15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சிவகாசி ஜெயலட்சுமி

பல பேரை ஏமாற்றி மோசடி செய்ததாக பரபரப்பாக கைதாகி சிறைக்குச் சென்றவர் சிவகாசி ஜெயலட்சுமி. அவரிடமே மோசடி செய்திருக்கிறார்களா? என்று பலரும் சொல்லும்படியாக ஒரு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகாசி ஜெயலட்சுமி… கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இந்த பெயர் பிரபலம். கடந்த 2004ஆம் ஆண்டு பத்திரிகைகள் அனைத்திலும் சிவகாசி ஜெயலட்சுமி விவகாரம் முக்கிய இடம் பிடித்தது. அந்தளவுக்கு தமிழகத்தையே கலக்கிய எடுத்தார் சிவகாசி ஜெயலட்சுமி. போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் போலீஸ் வேடத்தில் நகை
 

பல பேரை ஏமாற்றி மோசடி செய்ததாக பரபரப்பாக கைதாகி சிறைக்குச் சென்றவர் சிவகாசி ஜெயலட்சுமி. அவரிடமே மோசடி செய்திருக்கிறார்களா? என்று பலரும் சொல்லும்படியாக ஒரு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகாசி ஜெயலட்சுமி… கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இந்த பெயர் பிரபலம். கடந்த 2004ஆம் ஆண்டு பத்திரிகைகள் அனைத்திலும் சிவகாசி ஜெயலட்சுமி விவகாரம் முக்கிய இடம் பிடித்தது. அந்தளவுக்கு தமிழகத்தையே கலக்கிய எடுத்தார் சிவகாசி ஜெயலட்சுமி.

போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் போலீஸ் வேடத்தில் நகை கடைகளில் நகை மோசடி, வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அதிரவைத்தார் ஜெயலட்சுமி. போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் அன்றைய அமைச்சர்கள் சிலர் உடன் இணைத்து பேசப்பட்டவர் சிவகாசி ஜெயலட்சுமி. இதனாலேயே இவரது ஒரு வழக்கு தனி கவனம் பெற்றது.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரைக்கும் மோசடி வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்று வந்துகொண்டிருந்தார். பல வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டார். வழக்குகள் எல்லாம் முடிந்து மதுரையில் செட்டில் ஆகி இருக்கிறார் ஜெயலட்சுமி.

இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த எல்பின் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு விருதுநகரில் நடத்திய கருத்தரங்கில் ஜெயலட்சுமி பங்கேற்றார். அவற்றின் உரிமையாளர்கள் அழகர்சாமி மற்றும் ரமேஷ் அறிவித்த கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி, ஜெயலட்சுமி… அவரது நண்பர்கள், உறவினர்கள் என்று 2.45 கோடி ரூபாய் வசூலித்து எல்பின் நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டு டெபாசிட் செய்துள்ளார்.

ஒரே ஆண்டில் 3.45 கோடி ரூபாய் தருவதாக கூறியதால் இப்படி பணத்தை கட்டியுள்ளார். ஆனால் கடந்த ஆண்டு வரவேண்டிய பணம் வரவில்லை. அன்பின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு எந்த பிரயோசனமும் இல்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் ஜெயலட்சுமிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இதையடுத்து வேறு வழியின்றி திருச்சி எல்பின் நிறுவனத்தின் முன்பாக ஜெயலட்சுமி காத்திருப்பு போராட்டத்தைத் துவக்கி இருக்கிறார். எல்பின் நிறுவனம் போராட்டத்தை கைவிட கேட்டும், பணத்தை கொடுத்தால் மட்டுமே இந்த இடத்தை விட்டு செல்வேன் என்று உறுதியாக சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் வந்து முறையாக புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த ஜெயலட்சுமி, 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.