×

சென்னையில் ஒரே வாரத்தில் திருட்டு வழக்கில் 29 பேர் கைது! 

 

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் திருட்டு தொடர்பான 27 வழக்குகளில் தொடர்புடைய 1 பெண் உட்பட 29 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 3 சவரன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி, 7 செல்போன்கள். பணம் ரூ.4,23,220/-, 12 சைக்கிள்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங் பறிமுதல்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது e (DACO - Drive Againet Crime Offendors) Garde e a ஆணையாளர் திரு.சந்திப் ராய் ஏத்தோர். இகாப, அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாகனங்கள் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 03.03.2024 முதல் 09.03.2024 வரையிலான 7 நாட்களில் பதிவான சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பான 24 வழக்குகளில் தொடர்புடைய 1 பெண் மற்றும் 6 இளஞ்சிறார்கள் உட்பட 26 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 சவரன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள். 7 செல்போன்கள். ரொக்கம் ரூ.4.23.220/-, 12 சைக்கிள்கள் மற்றும் 1 இன்வெர்ட்டர் பேட்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 7 நாட்களில் மோட்டார் கண திருட்டு தொடர்பான 3 வழக்குகளில் தொடர்புடைய 1 இளஞ்சிறார் உட்பட 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வாகனங்கள் திருட்டு. செல்போன் பறிப்பு. தங்கச்சங்கிலி பறிப்பு மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் தெரிவிக்கப்படுகிறது.