57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Mar 16, 2024, 14:07 IST
வரும் 2025-ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், 57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு!
1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார்.
தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, கோவையில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார் தமிழினத் தலைவர் கலைஞர்.
வரும் 2025-ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் #இரண்டாம்_உலகத்_தமிழ்ச்_செம்மொழி_மாநாடு நடைபெறவுள்ளது!
சென்னையில் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் ஒன்று கூடுவோம்! உலகம் வியக்கத் தமிழை உயர்த்திப் பிடிப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்