×

சென்னை விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா கடத்தி வந்த 3 பேர் சிக்கினர்!

 

பாங்காங்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் உயர் ரக கஞ்சா கடத்தி வந்த 3 பேரை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.  

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு விமானம் மூலமாக சிலர் கடத்தல் பொருட்களை கொண்டு வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், அவ்வபோது கடத்தல் தங்கம், போதைப் பொருட்கள், அரியவகை உயிரினங்கள் உள்ளிட்டவை கடத்தப்படும் நிலையில், அதனை சுங்க துறை அதிகாரிகள் கண்டறிந்து கடத்தி வருபவர்களை கைது செய்கின்றனர். இதேபோல் கடந்த சில நாட்களாக சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், பாங்காக்கில் இருந்து உயர் ரக கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பாங்காங்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் உயர் ரக கஞ்சா கடத்திய சகோதரர்கள் உட்பட 3 பேரை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பலகார பொருட்களோடு கலந்து பொட்டலங்களாக மாற்றி கடத்தி வந்து விற்றதாக சென்னையை சேர்ந்த முகமது யூசுப், ஆருண் ஆகிய சகோதரர்களும், பரூக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரூ.50 லட்சம் மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.