திமுக எம்.எல்.ஏ.மகன், மருமகளை பிடிக்க 3 தனிப்படைக்கள் அமைப்பு
Jan 23, 2024, 13:17 IST
சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண்ணை அவரது மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் எம்எல்ஏவின் மகன் ஆண்டோ, அவருடைய மனைவி மெர்லினா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நீலாங்கரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்த சூழலில் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் இருவரும் தலைமறைவாகினர்.