மேலும் 32 காவல் உயரதிகாரிகள் பணியிடமாற்றம்
Updated: Aug 8, 2024, 19:05 IST
தமிழ்நாட்டில் மேலும் காவல் உயரதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே 14 எஸ்பிக்கள் உட்பட 24 பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 32 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக பத்ரி நாராயணன் நியமனம்
- நாகை கடலோர பாதுகாப்பு குழும எஸ்பியாக விஜெய கார்த்திக் ராஜ் நியமனம்
- ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பியாக ரோகித் நாதன் நியமனம்
- ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக சசி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- மாநில மனித உரிமை ஆணைய எஸ்பியாக ஜெயலட்சுமி நியமனம்
- பூவிருந்தவல்லி 13-வது பெட்டாலியன் எஸ்பியாக தீபா சத்யன் நியமனம்
- சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக ஈஸ்வரன் நியமனம்