×

சாலையில் 3-வது முறையாக ஏற்பட்ட திடீர் பள்ளம்- மரண பயத்தில் வாகன ஓட்டிகள்

 

வளசரவாக்கம் சின்ன போருர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு அடிக்கடி ஏற்படும் திடீர் பள்ளத்தால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கம் மண்டலம் சின்ன போரூர் நியூ காலனி பகுதி பிள்ளையார் கோயில் தெருவில் சமீபகாலமாக  திடீர், திடீர் என பள்ளம் ஏற்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் பள்ளத்தை சீர் செய்து வந்தாலும் மீண்டும் மீண்டும் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள குடியிருப்பு, அடுக்கு மாடி கட்டிடத்திற்கு பாதிப்பு உண்டாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் சின்ன போருர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கி மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனம் பள்ளத்தில் சிக்கியது. பள்ளத்தில் பின் சக்கரம் மாட்டியுள்ளதால் வாகனத்தை வெளியே எடுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுக்குமாடி குடியிருப்பின்  அருகே தொடர்ந்து பள்ளம் ஏற்பட்டு வருவதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ள்னர்.