×

4 மக்களவை, ஒரு மாநிலங்களவை - தேமுதிக உறுதி!!

 

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்தன. இருப்பினும் இக்கூட்டணியில் கடந்த சில நாட்களாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக,  கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றொரு புறம்  அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில், பாமக, தேமுதிக , தமாக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகள் கொடுக்கும் கட்சிகளோடு கூட்டணி வைக்க விரும்பாத பிரேமலதா, 4 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவைக் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவோடு கூட்டணி வைக்க பிரேமலதா விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட சுதீஷ் மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்புள்ளது.