தொடர் வன்முறைகள் - தமிழக அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது!
Sep 4, 2023, 11:30 IST
4 பேர் போதை ஆசாமியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அறிந்து அதிர்ச்சியும், மனவருத்தமும் அடைந்தேன் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் , "பல்லடத்தில் தன் வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டதால் பாஜக பிரமுகர்கள் செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 4 பேர் போதை ஆசாமியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அறிந்து அதிர்ச்சியும், மனவருத்தமும் அடைந்தேன்!