மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
Jan 20, 2024, 10:47 IST
3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் இன்று வழிபாடு நடத்துகிறார். காலை 11 மணிமுதல் 12.40 வரை ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்கிறார். மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி ராமநாதசாமி கோயிலில் வழிபாடு செய்தபின் இன்று இரவு அங்கு தங்குகிறார். தனுஷ்கோடி அரிச்சல் முனை, கோதண்டராமசாமி கோயில்களுக்கும் நாளை செல்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை மதுரை விமான நிலையம் வந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் டெல்லி செல்ல உள்ள நிலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.