×

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ்

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர்கள் பணியிட மாற்றம். இணை பேராசிரியர்கள், உதவிப் உதவி பேராசிரியர்கள் 92 பேர் தமிழ்நாடு அரசின் பல்வேறு வேளாண் கல்லூரி, வேளாண் ஆராய்ச்சி மையங்களுக்கு  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிதிச் சிக்கல் ஏற்பட்டதாக கூறி ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக 2013 ஆம் ஆண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், தற்போதைய தலைமைச் செயலாளருமான ஷிவ்தாஸ்மீனா பல்கலைக்கழகத்தின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் 2013 இயற்றப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகம் நேரடியாக தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த நிர்வாக சீரமைப்பின் காரணமாக, நிதிச்சிக்கல் மற்றும் பல்கலைக்கழகத்தில் தேவைக்கு அதிகமான ஆசிரியர், ஊழியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக பல்கலைக்கழகத்தில் உபரியாக இருந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் படிப்படியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசின்  பல்வேறு கலை, அறிவியல் கல்லூரிகள் அரசின் பல்வேறு துறைகள் உள்ளிட்ட இடங்களுக்கு இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டு  பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்தப் பணி நிரவல் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் கல்லூரியில் ஏற்கெனவே ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் சிலர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் உபரியாக இருந்த இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் 92 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 92 பேரும் தமிழ்நாடு அரசின் வேளாண் கல்லூரிகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையங்களில் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், போதிய கல்வித் தகுதியின்றி பணியாற்றி வந்த 56 உதவிப் பேராசிரியர்களை அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.