×

சிவகாசியில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை 

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை நடைபெற்றுள்ளது. 

குட்டி ஜப்பான் என்ற ழைக்கப்படும் சிவகாசியில் நூற்றாண்டை எட்டியுள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும். பேன்சி ரகங்கள் உள்பட அனைத்து வகையான பட்டாசுகளுக்கும், உலகம் முழுவதும் வரவேற்புள்ள நிலையில், சைனா பட்டாசோடு சிவகாசி பட்டாசு உலக சந்தையில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில், சிவகாசி பட்டாசை அழிக்க சதி நடந்து வரும் காலகட்டத்தில், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் காரணமாக பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் பின்னடைவு ஏற்பட்டு வரும் வேளையிலும் கூட, ஒவ்வொரு வருடமும் பட்டாசு உற்பத்தியில் புதிய, புதியயுக்தியை கையாண்டு வாடிக்கையாளர்களை, அதிலும் குறிப்பாக சிறுவர்- சிறுமியர்களையும், இளைஞர்களையும் கவரும் விதத்தில் புதுப்புது பட்டாசு வகைகளை வித்தியாசமான முறைகளில் தயாரித்து தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை அதிகரிக்க புதுப்புது பட்டாசு ரகங்களை அறிமுகப்படுத்துவதென்பது ஆண்டுதோறும் நடைபெறும் வாடிக்கையான ஒன்றாகும். 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடைசி நேரத்தில் விற்பனை உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.