×

டெம்போ மீது வேன் மோதிய விபத்தில் புதுமண தம்பதி உட்பட 7 பேர் உயிரிழப்பு..!

 

ஜார்க்கண்டில் நேற்று முன்தினம் மாலை திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மற்றும் அவர்களது உறவினர்கள் நேற்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள தம்பூர் பகுதியில் இருக்கும் மணமகனின் வீட்டுக்கு வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். 

தேசிய நெடுஞ்சாலை 74-ல் வந்த போது எதிரே வந்த டெம்போ மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 வாகனங்களும் அருகில் இருந்த பள்ளம் ஒன்றில் கவிழ்ந்தன. 

மணமக்கள் வந்த வாகனத்தில் 11 பேர் இருந்தனர். அவர்களில் மணமகள், மணமகன், அவருடைய சகோதரர் உள்பட உறவினர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

காயமடைந்த மற்றவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் வேன் டிரைவர் உயிரிழந்தார். அடர்பனி, தெளிவற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்திற்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.