×

சென்னையில் தீபாவளி நாளில் 75 குழந்தைகள் பிறந்தன

 

தீபாவளி பண்டிகையொட்டி, சென்னை அரசு மருத்துவமனையில் 75 குழந்தைகள் பிறந்துள்ளன.

தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, புத்தாடை  அணிந்து பொதுமக்கள் கொண்டாடினார்கள். இந்தநிலையில் தீபாவளி தினத்தன்று, சென்னையில், ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, கஸ்தூரிபாய் மகப்பேறு  மருத்துவமனையில் மொத்தம் 75 குழந்தை பிறந்துள்ளது. அதன்படி, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் ஆண் 10, பெண் 12 குழந்தைகள் என மொத்தம் 22 குழந்தைகளும், ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் ஆண் 11,  பெண் 19 குழந்தைகள் என 30 குழந்தைகளும், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஆண் 19, பெண் 4 குழந்தைகள் என மொத்தம் 23 குழந்தைகள் பிறந்துள்ளது.

தீபாவளி பண்டிகை மட்டுமல்லாமல், குழந்தை பிறந்த சந்தோஷத்தில் மகிழ்ச்சியடைந்த பெற்றோர்கள், அவர்களது உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும், வீடுகளில் பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.