"அரசியலமைப்பும் - பன்முகத் தன்மையும் என்றும் நிலைத்திருக்கிற வகையில் உழைத்திட உறுதியேற்போம்" - அமைச்சர் உதயநிதி
Jan 26, 2024, 11:42 IST
இந்தியாவின் சிறப்புக்குரிய அரசியலமைப்பும் - பன்முகத் தன்மையும் என்றும் நிலைத்திருக்கிற வகையில் உழைத்திட குடியரசு நாளில் உறுதியேற்போம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin மற்றும் சக அமைச்சர் பெருமக்களுடன் இன்று கலந்து கொண்டோம். தமிழ்நாடு அரசின் சாதனைகளை துறைவாரியாக விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பார்வையிட்டோம்.
இந்தியாவின் சிறப்புக்குரிய அரசியலமைப்பும் - பன்முகத் தன்மையும் என்றும் நிலைத்திருக்கிற வகையில் உழைத்திட குடியரசு நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.