×

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து- 8 பேர் பலி

 

ஆந்திராவில்  ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 


 
ஆந்திர மாநிலம் அனந்தபுரம்  மாவட்டம் புட்லூர் மண்டலம் எலுட்லா கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்லடின்னே மண்டலம் திம்மாம்பேட்டாவில் உள்ள வாழைத் தோட்டத்தில் ஓட்டுநர் உட்பட 13 பேர் தங்கள் சொந்த கிராமத்திலிருந்து விவசாய கூலி வேலைக்குச் சென்றனர்.  தோட்ட வேலைகளை முடித்துக் கொண்டு நேற்று மாலை ஆட்டோவில் ஊர் திரும்பி கொண்டுருந்தனர். அப்போது  திம்மாம்பேட்டையில் அனந்தபூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் இருந்து  ​​கார்லடின்னுக்குள் செல்வதற்காக ஆட்டோ  சாலையின்  இடதுபுறத்தில் உள்ள சர்வீஸ் ரோட்டில்  இருந்து வலதுபுறம் செல்ல தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வருவதை கவனிக்காமல் ஆட்டோவை ஹைவே மீது செல்ல முயன்றனர். 

அதே நேரத்தில் தர்மவரத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற அரசு ஆர்டிசி பேருந்து அதிவேகமாக சென்று ஆட்டோ மீது மோதியது.  இதில் ஆட்டோவில் பயணம் செய்த பாலபெத்தையா (55), சின்ன நாகம்மா (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை 108ல் அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பெத்தக்கா (68), ராமன்ஜினம்மா (35) ஆகியோர் இறந்தனர்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமுடு (48), சின்னகண்ணா (55), கொண்டம்மா (50), ஈஸ்வரய்யா (53) ஆகியோர் உயிரிழந்தனர்.  பெத்துலம்மா, கங்காதர், லட்சுமிதேவி, ராமாஞ்சினம்மா, ஆட்டோ டிரைவர் நீலகண்டேஸ்வரா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என அனந்தபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஆத்மாராம் தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ5 லட்சம்  நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.  காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.