சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
Feb 10, 2024, 09:59 IST
ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 15 பேர் காயமடைந்தனர். மற்றொரு லாரி மீது மோதாமலிருக்க ஓட்டுநர் லாரியை திருப்பியபோது எதிர்திசையில் சென்று பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்து குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் , காயமடைந்த 15 பேரையும் உடனடியாக மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுத்தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.