ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு தலா ரூ.50,000 அபராதம்
Sep 5, 2024, 18:45 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா ஐம்பதாயிரம் அபதாரம் விதித்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 26 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் அதில் இருந்த 8 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த நிலையில் சிறைகாவல் முடிந்து இன்று எட்டு மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் விசாரணை நடத்திய நீதிபதி 8 பேரும் தலா ரூ.50,000 அபதாரம் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் 50,000 செலுத்த தவறினால் ஆறு மாதம் சிறை காவல் தண்டனை விதிக்கப்படும் என உத்தரவு விட்டுள்ளார்.