×

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் உற்பத்தி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை

 

புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், “இயற்கையை பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழலை பால்படுத்தக்கூடிய மனிதர்கள் விலங்குகள் கடல்வாழ் உயிரினங்கள் நீர் நிலம் காற்று என அனைத்தையும் பாதிக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று பிளாஸ்டிக்கை தடை விதிக்க தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது மட்டுமல்லாமல் அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சள் பை திட்டத்தையும் தொடங்கி வைத்து மஞ்சப்பை அவமானத்தின் சின்னம் அல்ல மஞ்சள் பையை பயன்படுத்துபவர்கள். சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் என்று ஊக்கப்படுத்தி அந்த திட்டத்தை செயல்படுத்தியதால் 20% நெகிழி பயன்பாடு குறைந்துள்ளது முதலமைச்சருக்கு கிடைத்துள்ள வெற்றி. இன்னும் இதை அடுத்தகட்ட நிலைக்கு எடுத்துச் செல்ல பல்வேறு நடவடிக்கையில் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓராண்டில் நம்பர் ஒன் முதலமைச்சர் என்று பெயர் பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்க கூடிய முதலமைச்சராக விளங்ககூடிய நிலையில், ஒன்றிய அமைச்சகம் தற்போது ஜூலை 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக்கிற்கும் தடை செய்வதாக உத்தரவு வெளியிட்டுள்ளது நமக்கு கிடைத்துள்ள வெற்றி. ஒட்டுமொத்தமாக மனித இனத்திற்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இது நல்ல செய்தியாக இது கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பை தந்துள்ள ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை செய்து 1117 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து 174 நிறுவனங்கள் மூடப்பட்டு 105 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற நடவடிக்கை எடுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக இருப்பதற்கு இந்தியா முழுவதும் பிளாஸ்டிக்கிற்கு தடை இல்லாத சூழ்நிலையே காரணமாக இருந்தது. தற்பொழுது இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் தடை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கண்டிப்பாக இதை கவனமாக கையாண்டு மக்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வந்தால் எப்படி கொரோனா பேரிடரிலிருந்து மீட்டெடுத்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு பாதுகாப்பான வாழ்க்கை வாழ்கின்றோமோ அதேபோல் எதிர்காலத்தில் மனிதர்கள் மட்டுமல்ல விலங்கினமும் ஒட்டுமொத்த உயிரினங்களும் வாழ்வதற்கு சுற்றுச்சூழல் மிகுந்த மண்ணாக பூமியாக மாற்றுவதற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவிப்பு மிகச்சிறந்த அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு சின்ன சின்ன நிறுவனங்களைக் கூட பிளாஸ்டிக் உற்பத்தி கண்டறியப்பட்ட அந்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது, 14 வகையான தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஒன்றிய அமைச்சகத்தின் இந்த அறிவிப்புக்கு பிறகு வெளிமாநிலங்களில் இருந்து வருவதும் குறையும். தமிழகத்திலும் இதுபோன்ற உற்பத்தி கண்காணிப்பில் கண்டறியப்பட்டால் உடனடியாக நிறுவனம் மூட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.