×

செஸ் ஒலிம்பியாட்- உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த வீரருக்காக வெற்றிப் புள்ளியை விட்டு கொடுத்த வீரர்

 

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்ற போது பொது பிரிவில் கலந்து கொண்ட ஜமைக்கா அணியுடனான ஆட்டத்தில் எஸ்டோனியா வீரர்கள் எதிர்த்து விளையாடினார். 

ஆட்டத்தின் நடுவே எஸ்டோனியா அணிக்காக விளையாடிய வீரரான மீலிஸ் கனெப், மயங்கி சரிந்தார். உடனடியாக ஆட்டத்தை நிறுத்திய நடுவரான கீர்ட், மயங்கிய வீரருக்கு முதலுதவி அளித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எஸ்டோனியா வீரர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எஸ்டோனியா வீரர் மயங்கி விழும் போது அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜமைக்கா வீரரான ஜேடன் ஷா, வெற்றி பெரும் தருவாயில் இருந்தார். செஸ் விதிகளின் படி ஒரு வீரர் தனது நகர்வை குறிப்பிட்ட நேரத்திற்குள் நகர்த்தாமல் இருந்தால், எதிரணி வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, புள்ளிகள் அவருக்கு வழங்கப்படும். 

அதன் அடிப்படையில் எஸ்டோனியா வீரர் சென்ற நிலையில், ஜமைக்கா அணியின் வீரரான ஜேடன் ஷா, தனது அணி கேப்டனுடனான ஆலோசனைக்கு பிறகு ஆட்டத்தை சமனில் முடிக்க ஒப்பு கொண்டார். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வீரர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு, ஆட்டத்தில் சமனில் முடித்த செயலை அங்கு இருந்த நடுவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர். இது தான் ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்கான பண்பு என ஜேடன் ஷாவுக்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்