×

வந்தே பாரத் ரயில் பாதையில் ரூ.264 கோடி செலவில் வேலி

 

பார்ப்பதற்கு அச்சு அசலாக புல்லட் ரயில் போலவே இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் என்பதும் 160 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் என்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.இந்த ரயில் என்ஜின் ஆனது மற்ற ரயில்களைப் போல் அல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும்.

பயணிகள் விமான பயணத்திற்கு இணையான சொகுசான வசதிகளை வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் போது உணரும் வகையில் உயர்தர வசதிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல், ரயில் பாதுகாப்புக்காக கவாச் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.

இந்த கவாச் தொழில் நுட்பம் என்பது ரயில்கள் மோதலை தடுப்பதற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். அதிவேக பயணத்திற்காக அதாவது 160 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும் திறனுக்காக போகியில் இழுவை மோட்டார்கள் உள்ளன. பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணத்திற்காக மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் வசதியும் இந்த ரயிலில் கொடுக்கப்பட்டுள்ளது.

ரயிலின் அனைத்து இருக்கைகளும் சாய்வு வசதியை கொண்டது. அதாவது பேருந்துகளில் செமி சிலீப்பர் வசதி கொடுக்கப்பட்டு இருப்பது போல சாய்வு வசதிகளுடன் கூடிய இருக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்கியூட்டிவ் கோச்களில் 180 டிகிரி கோணத்திலும் சுழலும் வகையில் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணத்தின் போது வெளியில் இருக்கும் காட்சிகளை ரசித்துக்கொண்டே பயணிக்க முடியும்.

ஓவ்வொரு பெட்டியிலும் 32 இன்ச் ஸ்க்ரீன்கள் இடம் பெற்றுள்ளன. இதில், பயணிகளுக்கான தகவல் ஒளிபரப்புவதோடு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையிலான டாய்லட்களும் இடம் பெற்றுள்ளன. இருக்கை எண்களை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் அறிந்து கொள்ளும் வகையில் பெய்ரலி எழுத்து முறையிலும் இருக்கை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அகமதாபாத் மற்றும் புதுடில்லி - இமாச்சலில் உள்ள உனா பகுதிக்கு என 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை - மசூர் இடையே இயங்கவுள்ள 5வது வந்தே பாரத் ரயிலின் இயக்கத்தை கடந்த 11ஆம் தேதி ஒரு நாள் பயணமாக பெங்களூரு வந்த பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் துவங்கப்பட்டு முதல் ஐந்தாவது முறையாக விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில் பாதையில் மாடுகள் மேய்வதை தடுக்க தண்டவாளத்தின் இருபக்கமும் தடுப்பு வேலி அமைக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மும்பை- குஜராத் காந்தி நகர் இடையே உள்ள 620 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.264 கோடி செலவில் தடுப்பு வேலி அமைக்கப்படவுள்ளதாக மேற்கு ரயில்வே பொது மேலாளர் அசோக் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்