×

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி..  தச்சங்குறிச்சியில் சீறிப்பாயும் காளைகள்..

 


2023ம் ஆண்டின் முதல்  ஜல்லிக்கட்டுப் போட்டி தஞ்சங்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியிருக்கிறது.  இந்த  ஜல்லிக்கட்டு போட்டியினை  அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து  தொடங்கி வைத்தனர். விழாவில் முதலில் கோவில் காளைகள் வாடிசாலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட நிலையில் அடுத்தடுத்து காளைகள் களமாடி வருகின்றன.  

இந்த தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 425 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் களம் காண்கின்றனர்.  வெற்றி பெறும் காளைகள் மற்றும்  வீரர்களுக்கு இருசக்கர வாகனம், குக்கர், கட்டில் என விதவிதமான பரிசுகளும் வழங்கப்படுகின்றன.  முன்னதாகவே  தச்சங்குறிச்சியில்  ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால்  இருமுறை  ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை எராளமானோர் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.