×

கூடுவாஞ்சேரி அருகே 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை

 

கூடுவாஞ்சேரி அருகே 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காரணி புதுச்சேரி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் தனுஷ் (17). இவர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் வீட்டிலிருந்த தனுஷை இரண்டு பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த தனுசை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ் உயிரிழந்தார்

தொடர்ந்து தனுஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் மற்றும் அவரது மைத்துனர் வினோத் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.