முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்
Jan 23, 2024, 09:04 IST
சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
குறிப்பாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மற்றும் ஆளுநர் உரை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் 28ஆம் தேதி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் சில தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள நிலையில் அதற்கு அனுமதி அளிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.