×

தனியார் பொழுதுபோக்கு மையத்தில் பராமரிப்பாளரை மிதித்து கொன்ற ஒட்டகம்

 

புதுச்சேரி அருகே தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ஒட்டக பராமரிப்பாளரை ஒட்டகம் மிதித்து கொன்றது.

மத்திய பிரதேசம் மாநிலம் பர்வா ணியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 67).‌ புதுவை தவளக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் கடற்கரையில் உள்ள தனியார் விடுதியில் ஒட்டகம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். ஞாயிறன்று அவர் ஒட்டகத்துக்கு தீவனம் போட்டுகொண்டிருந்தார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக ஒட்டகம் மிதித்து கடித்துள்ளது.  இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேசத் தில் உள்ள அவரது உறவினர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுவரை வரவில்லை. அவர்கள் வந்த பிறகே ரமேசின் உடல் பிரேத பரிசோதனை செய் யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.