×

அண்ணாமலை உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு 

 

அண்ணாமலை உட்பட 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.  ஜூலை 28ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். அண்ணாமலை மேற்கொண்டு வந்த பாதயாத்திரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பெரும்  வாக்கு வங்கியை பெற்று தரும் என்று அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறார். 

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.  ஆம்பூரில் நேற்று அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்ட நிலையில் போலீஸார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.