வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரா அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடக்கு ஆந்திரா அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் வடக்கு- வட மேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் காரணமாக இன்று கடலோர ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்து வரும் நாட்களில் ஒடிசாவில் மிக கனமழக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.