×

சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்! சென்னையில் பரபரப்பு

 

அயப்பாக்கத்தில் சிறுமி ஒருவரை வளர்ப்பு நாய் கடித்து இழுக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே அயப்பாக்கம் சர்ச் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் ரக்ஷிதா பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனிவாசன் அதே பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தனது வீட்டில் தயாரித்த பலகாரங்களை தான் முன்னாள் வசித்த வீட்டு உரிமையாளருக்கு தனது மகள் ரக்ஷிதாவிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்.