×

ஆண் நண்பர் கொடுத்த பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி - வசமாக சிக்கிய ஐடி பெண் ஊழியர்!!

 

சென்னை சூளைமேடு சக்தி நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் தனித்தனி  அறைகளில் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சந்தேகிக்கும் வகையில் நபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் கண்காணிப்பு வந்துள்ளனர். 

அத்துடன் அடுக்குமாடி குடியிருப்பில் உரிய அனுமதி பெற்று போலீசார் சோதனை செய்த போது ஒரு அறையில் இருந்து வித்தியாசமான வாசனை வந்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தியதில் அசாம் மாநில நியூஸ் பேப்பர் சுற்றப்பட்டு ஒரு பண்டல் இருந்துள்ளது. அதில் முழு இலையுடன் கூடிய முதல் ரக அசாம் கஞ்சா இருந்துள்ளது. இதை கண்ட போலீசார் அங்கிருந்த இளம் பெண்ணிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். இதை தொடர்ந்து பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சூளைமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டதில்,  பெண் புதுக்கோட்டையை சேர்ந்த சர்மிளா என்பதும் இவர் எம்பிஏ பட்டதாரி என்பதும் தெரியவந்துள்ளது.

 கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ள இவர் தாய் மருத்துவர் சிகிச்சையில் இருந்தபோது திருத்தணியை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர் சுரேஷ் என்பவர் உடன் பழகி வந்துள்ளார்.  இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில் ஷர்மிளாவின் அறைக்கு சுரேஷ் வந்து சென்றது தெரியவந்துள்ளது.

 தனது நண்பரான சுரேஷ் சில தினங்களுக்கு முன்பு ஒரு பார்சலை கொடுத்து பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றதாகவும் , அது கஞ்சா என்று தனக்கு தெரியாது என்றும் சர்மிளா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சர்மிளாவை  கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 300 கிலோ கிராம் முதல் தர கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  அதுத திருத்தணியில் பதுங்கி இருந்த சுரேஷையும் போலீசார் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட சுரேஷிடம் அசாமிலிருந்து உயர்தர முதல் கஞ்சா எப்படி கிடைத்தது? மற்றும் கஞ்சா விற்பனை  குறித்து விசாரித்து வருகின்றனர்.