×

நகை திருட்டு போனதாக புகார் செய்து போலீசாரை ஏமாற்றிய பெண்

 

பெரம்பலூர் அருகே 7 சவரன் நகையை வழிபறி கொள்ளையர்களிடம் பரிகொடுத்து விட்டதாக காவல்துறையினரிடம் புகார் அளித்து பொய்யாக நாடகமாடிய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே தனியாக சென்ற பெண்ணிடம் 7 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்த நிலையில், புகாரளித்த பெண்ணே தனது 7 சவரன் தாலி கொடியை, அவரது ரகசிய நண்பர்களிடம் கழட்டி கொடுத்துவிட்டு வழிபறி நடந்துவிட்டதாக நாடகமாடியுள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். 

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகள் மஞ்சுளா (40), கிருஷ்ணாபுரம் கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த மாதம் 300ஆம் தேதியன்று கிருஷ்ணாபுரம் வெங்கனூர் சாலையில் மதுரா பள்ளி அருகே தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது தனது 7 சவரன் தாலி சங்கிலியை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பறித்து சென்றுவிட்டதாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மேற்படி புகார் மீது வழக்குப் பதிவு செய்த  போலீஸார் வழிபறி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை காவல்நிலையம் அழைத்து சென்று  விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் புகார்தாரர் மஞ்சுளாவின் ஆண் நண்பர்கள் என்பதும் மஞ்சுளா தனது தாலிக்கொடியை  அவர்களிடம் தாமே கழட்டி கொடுத்துவிட்டு  காவல்நிலையத்தில் பொய் புகார் அளித்து நாடகமாடியுள்ளதும் தெரிவந்துள்ளது. 

இதையடுத்துவெங்கனூரை சேர்ந்த கிருஷ்ணகுமார், கடலூர் மாவட்டம் இராமநத்தம் பகுதியைச் சேர்ந்த பரிதிஇளம்வழுதி, மற்றும் பொய் புகாரளித்த மஞ்சுளா ஆகிய மூவரையும் அரும்பாவூர் போலிசார் கைது செய்து இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.