×

பேசி கொண்டிருக்கும் போதே காதலியின் மார்பில் துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

 

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்ட காதலனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே துவராபதியைச் சேர்ந்தவர் பொன்னைகி (17) மதுரை மாவட்டம் கொட்டாம் பட்டியைச் சேர்ந்தவர் செல்வம்(19). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இன்று செல்வம் நத்தம் அருகே துவராபதிக்கு வந்துள்ளார். தனது காதலியை பார்த்து பேசும் பொழுது காதலி பேச மறுக்கவே ஏர் கன் துப்பாக்கியால் காதலியை சுட்டு உள்ளார்.


இதில் படுகாயம் அடைந்த காதலி பொன்னழகி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் செல்வம்பூச்சி மருந்து குடித்து  தற்கொலைக்கு முயன்று, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காதலியை ஏற்கனவே சுட்ட சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.