கொடுத்த அசைன்மெண்ட்டை முடிக்காத ஆதவ் அர்ஜூனா! அமலாக்கத்துறை மூலம் ஷாக் ட்ரீட்மெண்ட்
சென்னையில் காலை முதலே லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை துடியலூரில் உள்ள மார்ட்டினின், வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளரும், தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திடீர் ரெய்டிற்கான காரணங்கள் என்ன? அமலாக்கத்துறையின் பிடியில் ஆதவ் அர்ஜூனா சிக்கியதற்கு சில காரணங்கள் வெளியாகி உள்ளன. 2012ஆம் ஆண்டில் லாட்டரி சீட்டு மூலம் சிக்கிம் மாநில அரசையே ஏமாற்றி, மோசடி செய்ததாக மார்டின் மீதான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, இந்த வழக்கில் 278 கோடி ரூபாய் மதிப்பிலான மார்ட்டினின் சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்தது. இது தவிர புலனாய்வு அமைப்புகள் மற்றும் சிபிஐ ஆகியவற்றின் பிடியிலும் மார்ட்டின் சிக்கியுள்ளார். இந்த சூழலில் தனது மாமனாரான லாட்டரி அதிபர் மார்ட்டினை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, மத்திய பாஜக அரசை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரை ஆதவ் அர்ஜூனா சந்தித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஆதவ் அர்ஜூனாவுக்கு சில அசைமெண்ட் கொடுத்து அதன்படி நடக்க சொல்லினர். முதலில் டீலுக்கு ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜூனா, பின்னர் அதற்கு எதிர்மறையாக செயல்பட்டதாக தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அந்த முக்கிய பிரமுகர்கள் மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை மூலம் மார்ட்டினும் ஆதவ் அர்ஜூனாவிற்கும் நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், தாங்கள் சொன்ன அசைன்மெண்ட்டை தமிழ்நாட்டில் சரியாக நிறைவேற்றாவிட்டால் விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என்பதை எச்சரிக்கும் விதமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.