×

சீமான் மீது நடவடிக்கை தேவை -  அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் புகார் 

 

நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில் சமீபத்தில் சென்னை மாநகர காவல் ஆணையரை  சந்தித்த நடிகை விஜயலட்சுமி சீமானை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
 

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை 10.30  மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர்.  ஆனால்  விஜயலட்சுமி வழக்கில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் இன்று ஆஜராகவில்லை .  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் வரும் 12ஆம் தேதி அன்று ஆஜராவதாக சீமான் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.