×

நடிகர் தனுஷின் படப்பிடிப்பு அனுமதி ரத்து

 

திருப்பதியில் பொது மக்களுக்கு, மருத்துவமனை செல்லும் நோயாளிகள், பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இடையூறாக தனுஷ் நடிப்பில்  சினிமா ஷூட்டிங் எடுக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் அளித்ததை எடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி அலிபிரி சந்திப்பு ஏழுமலையான் கோயிலுக்கு மலைக்கு செல்லும் வாகனங்கள், ரூயா , சுவிம்ஸ், குழந்தைகள் , மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லவும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் முக்கிய சந்திப்பாகும். இங்கு மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ்,  நாகார்ஜுனா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக எப்போதும் பரபரப்பாக காணப்படும்  திருப்பதி  அலிபிரியில் நேற்று காலை படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பிற்காக இந்த  சாலையை முற்றிலுமாக நிறுத்தி  எடுக்கப்பட்டது. இதனால்   பக்தர்கள்,நோயளிகள்,  பள்ளி செல்லும் மாணவர்கள், ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல இருந்த பக்தர்கள் கடும் சிரமத்தை எதிர் கொண்டனர். 

இதனால் அங்கிருந்த பொது மக்கள் படகுழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால்  படக்குழு நாங்கள் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துவதாக கூறி பொது மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட படப்பிடிப்பு குழுவில் வந்த தனியார் பாதுகாவலர் அங்கு காட்சிப்படுத்தி கொண்டுருந்த ஊடகத்தினரின் செல்போனை உடைத்தனர். இதேபோல் கோவிந்தராஜா சுவாமி கோயில் முன்பு படப்பிடிப்பிற்காக பக்தர்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து  கிழக்கு காவல் நிலையத்தில் பொது மக்களும், ஊடகத்தினர், பாஜக மாநில செய்திதொடர்பாளர் பானுபிரகாஷ் ஆகியோர் தனிதனியாக போக்குவரத்து இடையூராக படப்பிடிப்பு நடத்தி பொது மக்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்தனர். மேலும் தினந்தோறும் பல லட்சம் பக்தர்கள் பக்தியுடன் வணங்கி திருமலைக்கு செல்லும் புனிதமான கருட சந்திப்பில்  விபத்து காட்சியை படமாக்குவது நியாயமானது தானா என பொது மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து படக்குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்து கொண்டனர்.