×

மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!

 

மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'எதிர்நீச்சல்' புகழ் நடிகர் மாரிமுத்து   மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.  இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் , விமலின் புலிவால் ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.   20க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சூழலில் நடிகர் மாரிமுத்து மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.