×

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

 

நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு காத்திருந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இனிப்புகள் செய்து தங்களது உறவினர்களுக்கு பறிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து இருந்தனர். இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றனர்.